கலிகெழு கொற்கை

Brand: அகநாழிகை
Product Code: AGA039
Availability: In Stock
₹240
Qty:
 
Price:
Ex Tax: ₹240

அகநாழிகை பதிப்பக வெளியீடு : 39

கலிகெழு கொற்கை 

- மீனவர் வாழ்வியலை முன்வைத்து ஜோ டி குரூஸ் படைப்புலகம் - (கட்டுரைகள் - கடிதங்கள் - நேர்காணல்கள்) 
- தொகுப்பாசிரியர் : தி.பரமேசுவரி

ரூ.240
---------------------------------------------------------------------------

நமது காலகட்டத்தின் சித்தாந்தங்கள் என்று நாம் நம்பிக் கொண்டிருக்கின்ற பெரும் விருட்சத்தின் அடிமரத்தில் கோடாலி வைத்தாயிற்று என்றும் சொல்லலாம். சித்தாந்தங்கள் தகர்ந்துபோகும் நிலை அண்மையில் ஏற்பட்டுக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது. தனி மனித கருத்துச் சுதந்திரம் எந்த அளவில் பொதுமக்களால், ஆட்சியாளர்களால் இலக்கியவாதிகளால், அரசியல்வாதிகளால் நோக்கப்படுகிறது என்று கவனிக்கிறேன். கருத்துச் சுதந்திரத்தையே தன் ஆயுதமாகக் கொண்ட இலக்கியவாதிகளும்கூட கருத்துச் சுதந்திரம் பற்றிய சரியான நிலைப்பாடின்றி, கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறார்கள். ஒரு இலக்கியவாதி தன் படைப்பைக் கொண்டுவந்தால் அந்தப் படைப்பைக் கொள்கை ரீதியாக விமர்சிக்கலாம். ஆனால் இன்று பேச்சுரிமை, எழுத்துரிமை என்பது நிராகரிக்கப்பட்டிருக்கிறது என்பதே நிதர்சனமான உண்மை. அத்தகைய புராதனமான மனங்களுக்குச் சம்மட்டி அடி கொடுத்து, சமீப காலங்களில் மாற்றுச் சிந்தனையைக் கொண்டு வர என் எழுத்தும் துணை நிற்கிறது என்பதில் நான் பெருமைப்படுகிறேன். நான் என் சமூகத்தின் அடித்தளத்திலுள்ள மக்களின் ஆன்மாவாக இருக்கிறேன். நாவலில் வரும் ஏதோவொரு கதாபாத்திரத்தின் பேச்சிலிருக்கும் கருத்தை ஜோ டி குரூஸின் கருத்தாக எண்ணிக்கொண்டு விமர்சித்து ஆணியடிப்பவர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். என்னுடைய படைப்புகள் கடற்கரை சமூகங்களின் ஆன்மாவாக சாதி, மதம் தாண்டிய அவர்களின் குரலாகவே ஒலிக்கிறது. நான் ஜோ டி குரூஸ் என்ற தனிமனிதனல்ல. கடற்கரைச் சமூகங்களின் ஆன்மாவாக இருக்கிறேன் என்பதே என்னை மூச்சுவிட வைத்துக் கொண்டிருக்கிறது.ஜோ டி குரூசின் முன்னுரையிலிருந்து...

Write a review

Your Name:


Your Review: Note: HTML is not translated!

Rating: Bad           Good

Enter the code in the box below:

Best Seller