முப்பத்தி நாலாவது கதவு

Brand: அகநாழிகை
Product Code: AGA040
Availability: In Stock
₹120
Qty:
 
Price:
Ex Tax: ₹120

அகநாழிகை பதிப்பக வெளியீடு : 40

முப்பத்தி நாலாவது கதவு 

(மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்)
தமிழில் : புல்வெளி காமராசன்

ரூ.120

இடாலோ கால்வினோ - ஓ ஹென்றி - எதிக் ஜீவிடா - நஜ்மல் ஹசன் ரிஸ்வி - ஷஷாங்க சீதாராம் - அம்ரிதா ப்ரீதம் - கீதா இரண்யன் - கனக் மச்சாரி - நீரு நந்தா - நிரூபமா பரக்கோஷன்· நசீம் காரல் - எம்.முகுந்தன் - அரிமோகன் ஜாஹா - மதுராந்தகம் நரேந்திரா ஆகிய பதிமூன்று எழுத்தாளர்களின் சிறுகதை மொழிபெயர்ப்பு தொகுப்பு.
--------------------------------------------------------

“பெண்களுக்கு வீட்டைத் தவிர வேறு எதுவும் தெரியாது. அன்பு, பாதுகாப்பு என எதையும் தராவிட்டாலும்கூட..”
எந்த மொழியில் எழுதப்பட்டாலும், எந்தக் காலத்தில் எழுதப் பட்டாலும் மாறாத இந்த பிம்பம் துயர் தருகிறது. பெண் அன்பைத் தின்று வாழும் உயிர். தனக்கு நேரும் எல்லா அவமானத்திற்கும், ஏளனத்திற்கும், இழிவிற்கும், புறக்கணிப்பிற்கும் மருந்தாக அவள் வீட்டையும் உறவுகளையும் நினைத்துக் கொள்கிறாள். துரதிர்ஷ்டவசமாக இவற்றின் ஊற்றே அங்கிருப்பதை அறியாமல், அடிக்கும் தன் அம்மாவின் கால்களையே சுற்றிச்சுற்றி வந்து அழும் குழந்தையைப்போல், எவ்வளவு துயர் வந்தாலும் பெண் வீட்டையே தன் ஆதாரமாகப் பிடித்துக் கொண்டு சுற்றிச்சுற்றி வருகிறாள். உலகம் முழுக்க இப்படி அன்பின் பெயரால் துயர் வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்களின் பல்லாயிரம் கதைகளைக் கூற முடியும். அந்தக் கதைகள் எல்லாவற்றிலிருந்தும் பெயர்களை, இடங்களை, காலத்தை நீக்கிவிட்டு அதற்குப் பெண் என்ற பொதுப்பெயர் கொடுத்தால் மிகச் சரியாகப் பொருந்திப் போகும்.வாழ்க்கை தரும் நெருக்கடிக்கும், உறவுகள் தரும் ஏமாற்றத்திற்கும் இடையில் சிக்கி அல்லல்படும் பல பெண்களின், மனிதர்களின் கதைகள் 
இத்தொகுப்பில் உள்ளன.

- அ.வெண்ணிலா

Write a review

Your Name:


Your Review: Note: HTML is not translated!

Rating: Bad           Good

Enter the code in the box below:

Best Seller