வற்றா நதி (சிறுகதைகள்) - கார்த்திக் புகழேந்தி

Brand: அகநாழிகை
Product Code: AGA047
Availability: In Stock
₹120
Qty:
 
Price:
Ex Tax: ₹120

காட்டுச் செடிகளுக்கு யாரும் நீரூற்றிப் போவதில்லை. சொந்த ஊர் மனிதர்களின் அன்பையும் நேசத்தையும்,கசடுகளையும், வாழ்ந்த அடையாளத்தின் படிமங்களையும் சுமந்து காலங்காலமாய் தன் பாதையில் சுழித்தோடும் தாமிரபரணியைத்தான் வற்றா நதியென்று தன் முதல் புத்தகத்திற்கு தலைப்பாக்கி இருக்கிறார் கார்த்திக் புகழேந்தி.

 

வற்றா நதியைச் சுற்றி வாழ்ந்த மக்களின் வாழ்வு நிகழ்வுகளை, பண்பாட்டுப் பழக்கங்களை,  மூர்க்க / சாந்த குணாதிசயங்களை,  கரைந்து ஒழுகும்  அன்பை, காலம் தாண்டி நிலைக்கும் வழிபாடுகளை, புரையோடிப் போன நம்பிக்கையை, முதுகில் தழும்பேற்றின துரோகத்தை, புதைபடிமங்களாய் மூதாதையர் விட்டுச் சென்ற தடயங்களை என இந்தக் கதைகளை வாசிக்கிற போது தண்ணீர் குடத்துக்குள் கடலையே அடைத்திட்டது போன்ற மலைப்பு உண்டாகிறது. சிலவற்றில் குருத்துவிட்டு குலைதள்ளி  பூவிரிந்த வாழை புயல் மழையில் சரிந்து விழுந்து அழுகிப்போனது போல ஏதோ ஒரு வலியை நெஞ்சில் இறக்கி வைத்து விட்ட அனுபவம் ஏற்படும்.

கதை சொல்லி குணத்தில் கார்த்திக் ஒரு அம்புலிமாமா பேரன். ஒரு நல்ல எழுத்தாளனுக்கான அத்தனை குணாதிசயங்களையும் அவன் எழுத்துக்களில் நிச்சயம் நீங்கள் காணமுடியும். திருநெல்வேலியையும்,தாமிரபரணியை சுற்றி வாழ்ந்த / வாழும் மக்களை பற்றியும் எழுதித் தீர்த்துவிட வேண்டும் என்பதே அந்த பேராசை. அதன் முதல் துளியே இந்த வற்றா நதி

- கனவுப் பிரியன்

Write a review

Your Name:


Your Review: Note: HTML is not translated!

Rating: Bad           Good

Enter the code in the box below:

Best Seller