அம்மாவின் தேன்குழல் (சிறுகதைகள்) - மாதவன் இளங்கோ

Brand: அகநாழிகை
Product Code: AGA050
Availability: In Stock
₹130
Qty:
 
Price:
Ex Tax: ₹130

எழுத்துக்குள் கிடைக்கிற உள்ளொளிக்கான தரிசனமே என்றென்றும் அதை நம்மோடு தக்க வைத்திருக்கிறது. எல்லாமே பொருள்மயமாகிவிட்ட சூழலில், இருந்ததற்கான எந்தச் சுவடுகளுமின்றி வாழ்க்கை முறையும், பண்பாடும், மனித நேயமும் நம் கண்ணெதிரே கொஞ்சம் கொஞ்சமாய் கை நழுவிப் போய்க் கொண்டேயிருக்கிறது. இழந்து கொண்டு வருபவை குறித்த அகத்துயரம், மனித நேயம், புலம் பெயர் வாழ்க்கையின் கற்பிதங்கள், அகச்சிக்கல்கள், உள்ளாழ்ந்த அன்போடு ஸ்பரிசிக்கிற விரல் நுனிகளில் கிடைத்துவிடுகிற இதம், மொழி, நிற பேதங்களற்று வலி என்பது எல்லோருக்கும் ஒன்றுதான் என்ற எளிய யதார்த்தத்தின் உணர்தல் இவையே மாதவன் இளங்கோவின் படைப்புகளின் பேசுமொழி. காலத்தின் விளிம்பில் அமர்ந்து வெளியிலிருந்து பார்க்கும் ஒரு பார்வையாளனின் தொனியில் தன்போக்கில் தானாகவே எழுதிச் செல்கின்றன இவரது கதைகள். பூடகத்தன்மையற்று நேரடியாக உணர்வுக் கடத்துதலை நிகழ்த்தி, வாசிக்கையில் கிளை நுனியிலிருந்து விழத் தளும்பும் கடைசி மழைத் துளி போலாகி பதற்றமுறுகிற மனக்குலைவுகளை சமன்படுத்துவதிலும், உலுக்கி உள்ளதிரச் செய்வதிலும் கதையோட்டம், கதை சொல்கிற உத்தி, மனத் ததும்பல்களை உணர்வுகளாகக் கடத்துதல், முற்றிலும் புதிய கதைப் புலக்காட்சி என எல்லாவிதத்திலும் முதல் தொகுப்பு என்ற அடையாளமற்று     நேர்த்தியான விவரணையில் சிறப்புறச் சொல்லியிருப்பது மாதவன் இளங்கோவின் வெற்றி.

- பொன்.வாசுதேவன்

Write a review

Your Name:


Your Review: Note: HTML is not translated!

Rating: Bad           Good

Enter the code in the box below:

Best Seller