2015-ஆம் ஆண்டுக்கான சிறந்த சுற்றுச்சூழல் புத்தக விருது பெற்ற நூல்

-------------------------------------------------------------------------------------------------------------------------

சூழலியல் - காட்டுயிர் பாதுகாப்பு - பறவையியல் கட்டுரைகள்

----------------------------------------------------------------------------------------------------------

 

 மனித வாழ்வில் பிரிக்க முடியாத அம்சம் இயற்கை. நீர், நிலம், காற்று, நெருப்பு, விசும்பு என்ற ஐம்பூதங்களின்றி உலக வாழ்க்கை கிடையாது. அறிவியலின் வருகைக்கும்,   வளர்ச்சிக்கும் பிறகு தொன்மையான வாழ்வாதாரங்களான இயற்கை சீரழிக்கப்பட்டது. காடுகளை அழித்தும், நீர் நிலைகளை ஆக்கிரமித்தும், கானுயிர்களை வேட்டியாடி அருகச் செய்து அவற்றின் வாழ்வாதாரங்களைப் பறித்தும் இயற்கையை நாசப்படுத்தி வருகிறோம். நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஒவ்வொரு மனிதனும்   இத்தகைய இயற்கையழிவுகளுக்கான காரணிகளாக இருந்து விடுகிறோம். உலகைக் கெடுக்கும் இந்தச் செயல்களை மனித விலங்குகளான நாம்தான் செய்கிறோம்.       Ôயாருக்கானது பூமிÕ என்ற இந்தக் கட்டுரைத் தொகுப்பின் வாயிலாக இயற்கையை, காட்டுயிர்களை, பறவைகளை நேசித்தலின், பாதுகாத்தலின் அவசியத்தை நமக்கு உணர்த்துகிறார் சதீஸ் முத்து கோபால். சூழலியல் சார்ந்த அவரது ஆர்வமும், தன்னனுபவம் சார்ந்த எழுத்து நடையும், நம்மிலும் சூழலியல் மீதான ஆர்வத்தையும், அக்கறையையும் ஏற்படுத்துவதாக உள்ளது.   நாம் வாழ்கிற பூமி நமக்கான வசிப்பிடம் என்பதை உணர்ந்து, நம் வருங்கால சந்ததியினருக்கு அதன் தூய்மையும், வளங்களும் கெடாமல் பாதுகாப்பாக ஒப்படைக்கச் செய்ய நாம் கவனம் கொள்ள வேண்டும். மனித நேயம் என்பது சக உயிரினங்களை, இயற்கையை, பறவைகளை நேசிப்பதிலும்தான் உள்ளது. இயற்கையை நேசிப்போம், பாதுகாப்போம். நாம் வாழும் உலகம்  நலமாகட்டும்.

 

- பொன். வாசுதேவன்

Write a review

Your Name:


Your Review: Note: HTML is not translated!

Rating: Bad           Good

Enter the code in the box below:

Best Seller