அக்காவின் தோழிகள்

Brand: அகநாழிகை
Product Code: AGA053
Availability: In Stock
₹60
Qty:
 
Price:
Ex Tax: ₹60

   காஞ்சும் பெய்ஞ்சும் தன் பிழைப்பைக் கெடுக்கும் என இயற்கையை வசவிக்கொண்டே அதனோடு தன் உழைப்பைப் பகிர்ந்து கொள்கிற கடைமடைப் பகுதியிலிருந்து தன் படைப்புகளைப் பகிர்ந்துவரும் நீரை.  மகேந்திரனின் முதல் கவிதைத் தொகுப்பு இது.

கலையிலிருந்து, குறிப்பாகக் கவிதையிலிருந்து அரசியல் பிரித்தெடுக்கிற முயற்சி காலங்காலமாகத் தொடர்ந்து வந்தாலும் அரசியல் புரிதலோடு எழுதுகிறவர்களின் வருகை வற்றிப்போகும் நிலையை எந்தக் காலச் சூழலும் தந்துவிடவில்லை. மகேந்திரனின் அரசியல் கவிதைகள் இத்தொகுப்பிற்கான சரியான முகத்தைத் தரும். விவசாயம் என்பது உலகிற்கே உணவிடல் போன்ற தர்மச் சொல்லாடல்களில் புழங்கி கொண்டிருக்கையில், வியர்வையின் நெடியை வீசும் இத்தொகுப்பின் கவிதைகள் கவனிக்கத்தக்கன.  

இத்தொகுப்பின் சரிபாதிக் கவிதைகள் வேறொரு மொழிநடையில் பயணிக்கின்றன. நேசத்தின் திளைப்பையும், பிரிவின் இருளையும், தனிமையின் மௌனத்தையும் அந்தக் கணங்களை மீட்டெடுத்துவிட துடிக்கிற தவிப்பையும் அவை தருகின்றன.

- விஷ்ணுபுரம் சரவணன்

Write a review

Your Name:


Your Review: Note: HTML is not translated!

Rating: Bad           Good

Enter the code in the box below:

Best Seller