மஞ்சள் முத்தம்

Brand: அகநாழிகை
Product Code: AGA-055
Availability: In Stock
₹60
Qty:
 
Price:
Ex Tax: ₹60

மலைகளுக்குக் கூனல் விழச் செய்துவிடும் பெரும் துயரம், அன்னா அக்மதோவாவுக்குப் போல எமக்கு விதிக்கப்படவில்லை. ஆண்களைக் காற்றைப் போலப் புசித்து, மரணித்தலை ஒரு கலையைப் போலப் பயின்ற சில்வியா பிளாத்தின் உக்கிரமும் எமக்கு அந்நியமானதாகவே இருக்கிறது. காயங்களை ரணங்களாகக் காட்டிக் கொள்ளும் குழந்தைமையும் எம்மிடமிருந்து முற்றுமாக விடைபெற்றுச் செல்லவில்லை. அதேசமயம், அவதானிப்பும் அனுமானமும் உணர்த்திக் கொடுக்கிற பராதீன வலிகளை ஸ்பரிசிக்கும் நுண்ணுணர்வு இன்னும் எஞ்சியே இருக்கிறது எம்மிடம்.  புறாக்களின் சூலகம் ஒவ்வொன்றிலும் படித்திருக்கும் செங்குருதியைக் காட்டும் மெலிந்த விரல், ரோஸ்லினின் கவிதை வரிகளிடையே பயணித்து உணர்த்தும் செய்தி இதுதான். தீக்கொன்றையால் பரவியிருக்கும் முற்றத்தை நனைக்கும் மழைநீராய், வெம்மையும் தண்மையும் கலந்து பெருகுகின்றன இக்கவிதைகள்.


- ந. ஜயபாஸ்கரன்

Write a review

Your Name:


Your Review: Note: HTML is not translated!

Rating: Bad           Good

Enter the code in the box below:

Best Seller